புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதிக்கு உட்பட்ட சேசைய்யா சாலையில் அமைந்துள்ள நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்திற்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள குழந்தைகளை பற்றி மையத்தில் உள்ளவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். அங்குள்ள பணியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினர்.