புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 17ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் ஜூன் 4ம் தேதி ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் மது பான கடைகள், மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற கடைகள் மற்றும் பார்களில் விற்பனை நடக்காமல் மூடப்பட வேண்டும். இந்த நாட்களில் மதுபானங்களை விற்கவோ, வேறு எங்கும் கொண்டு செல்லவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.