மனவளர்ச்சி குறைபாடு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தினை ஆய்வு!

50பார்த்தது
மனவளர்ச்சி குறைபாடு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தினை ஆய்வு!
புதுக்கோட்டை நகராட்சி, அம்பாள்புரம் 1-ஆம் வீதியில், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும், கிரசண்ட் மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியில், மதிய உணவுத் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புக்கல்வி, மறுவாழ்வு பயிற்சிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செ. உலகநாதன், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் க. ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி