புதுகை மாவட்டம் அம்மாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் பசுக்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளாகும். இங்குள்ள கடல் ஆமை மற்றும் கடல் பசுக்கள் அழிந்து வரும் இனமாகும். வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவைகளைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போழுது கடல் ஆமைகள் இனப்பெருக்க காலம் எனவே அவைகளைப் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா எச்சரித்துள்ளார்.