புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜூன் 10) மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர்கள் சுப்பிரமணியன், ரகுபதி, மெய்யநாதன், MLA-க்கல் சின்னதுரை, முத்துராஜா, ஆட்சியர் அருணா ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி பூச்செண்டு கொடுத்து சிறப்பாக வரவேற்றார். அதன் பிறகுபுதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி முடித்த மாணவ மாணவியர்களுக்கு தமிழக சுகாதாரக் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதற்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.