புதுகை மாவட்டத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான மார்ச். 22 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது மார்ச். 23 அன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.