புதுக்கோட்டை கீழ மூன்றாவது வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று பெருமாளை தரிசனம் செய்தனர். ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சனிக்கிழமை என்பதால் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் ஆலயத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.