புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் தீதான் பண்ணைக்களம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா இவருக்கும் இவருடைய கணவர் ராம்குமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் ஒரு காதல் திருமணமாகும் கடந்த 2011 ஆம் ஆண்டு வயலூர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். திருமணம் முடிந்த ஆறு மாதத்தில் இவருடைய கணவர் சிங்கப்பூர் சென்று விட்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று. 10. 8. 2013 அன்று பிறந்தது இப்பொழுது அந்த குழந்தைக்கு வயது 12 ஆகிறது. இந்நலையில் கடந்த சில மாதங்களாக இவருடன் இருந்த தொடர்பை கணவர் ராம்குமார் துண்டித்து விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை பின்பு தான் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் அவருடைய அக்கா கலாராணி என்பவரின் மகள் சிபிதா என்பவரை 23. 9. 2024 அன்று இரண்டாவது திருமணம் திருட்டுத்தனமாக செய்துள்ளார். இதனால் அவர் கணவர் மீது இலப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிடம் கணவரை சேர்த்து வைக்க மனு கொடுத்தார்.