வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

579பார்த்தது
புதுக்கோட்டை: புதுகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் லட்சுமணதாஸ் காந்தி தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். திருத்திய
முதுநிலை பட்டியல் வெளியிடாமலும், துணை
தாசில்தார் பட்டியல் வெளியிடாமலும், தவறாக
துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கியதையும்
துணை தாசில்தார் நிலையில் பணி வரன்முறை மற்றும் தகுதி காண் மூலம் விளம்பல் ஆணை பிறப்பிக்க கோரியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்
கோஷம் எழுப்பப்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி