பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

53பார்த்தது
பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
கோடை விடுமுறைக்கு பின்னர்
பள்ளிக்கு வந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தி
புதுக்கோட்டை திலகர்திடல்
ஏவிசிசி மழலையர் பள்ளியில்
மேளதாளம் முழங்க
சிவப்புக்கம்பள வரவேற்பு
கோடை விடுமுறை முடிந்து பள்ளி
இன்று திறக்கப்பட்டதை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி மழலையர் பள்ளிக்கு வருகை வந்த
குழந்தைகளுக்கும் பெற்றோற்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மேளதாள நாதஸ்வர இசை முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் பூ, சந்தனம், குங்குமம் வழங்கி பன்னீர் தெளித்து ஸ்வீட் பாக்ஸ்களும் வழங்கப்பட்டது.
குழந்தைகளை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் இந்த முயற்சியை பெற்றோர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
நிகழ்வுகளுக்கு பள்ளியின் நிறுவனரும் ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநருமான ஏவிசிசி கணேசன்
தலைமை வகித்தார். தாளாளர்
திருமதி மல்லிகா கணேசன்
முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏவிசிசி கல்விக்குழும ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி