புதுக்கோட்டை நகராட்சியின் கடைசி நகர் மன்ற கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. அடுத்த கூட்டம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் மாநகராட்சி மேயர் மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதால் இன்று நடைபெறும் நகராட்சியின் கடைசி கூட்டத்திலாவது புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் நாய் தொல்லைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் நாங்களே வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது வெறி நாய்களைப் பிடித்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கடைசி நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை மேலும் ஏற்கனவே நகராட்சியாக இருக்கும் பொழுது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
பி யு சின்னப்பா முத்துராமலிங்க தேவர் ஆகியோருக்கு சிலைகளும் புதுக்கோட்டை விஜய ரகுநாத தொண்டைமானுக்கு மணிமண்டபம் உள்ளிட்டவைகளை அமைப்பதற்கு ஏற்கனவே நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.