புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா புதுக்குளம் அருகே குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. கோடை காலத்தில் தண்ணீரை சேமித்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சாலையில் வீணாக செல்லும் குடிநீர் குழாயை பழுது நீக்கம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்பது பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.