புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியில் கொட்டகை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதை அறியாத அஷ்வின் (10), புவனேஸ்வரன் (7) ஆகிய இரண்டு சிறுவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிறுவர்களது சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.