புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு ராமலிங்கம் வீதியில் காவேரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு காலை முதல் தண்ணீர் வீணாகி செல்கிறது. கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், காவிரி குடிநீர் வீணாகுவது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீணாகும் தண்ணீரை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.