புதுகை புவனேஸ்வரி கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஸ்தபதி ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், இக்கோவில் 14,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றதில், 93 தூண்கள் 1200 சிலைகள் அமைக்கப்பட்டதாகவும், மேலும், இந்த நூற்றாண்டின் முழுமையான கல்கோயில் உலகம் முழுவதும் பேசப்படும் கோவில் என்றார்.