பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்ததை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யப் கூறியும், மதுபான உழலில் ஈடுபட்ட திமுக அரசு பதவி விலக கோரியும் பாரதிய ஜனதா கட்சியினர் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 170 நபர்களை கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை.