புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (29. 07. 2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடிக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்த கே. நாகேந்திரன் என்பவர், தனது இரு மகன்களை இராணுவத்திற்கு அனுப்பியமைக்காக, தமிழக அரசின் போர்ப்பணி ஊக்க மானியம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ. ஷோபா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கேப்டன். விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.