புதுகையை அடுத்த வைத்திக்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா, பூச்சொரிதல் மற்றும் காப்புகட் டுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
காலை முதலே நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி எடுத்தும், அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளிய தும் மாலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. வைத்திக்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி வலம் வந்து 5 மணிக்கு நிலையை அடைந்தது.