முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி
விஜய் பாஸ்கர் அவரது மனைவி ரம்யா ஆகியோர் தற்போது இரண்டாவது முறையாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியதாக கடந்த மே மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவரையும் மனைவி ரம்யாவையும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி
நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம உத்தரவிட்டிருந்தது. இன்று ஆஜராகி இருந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சில பக்கங்கள் விடுபட்டு உள்ளது.
இந்நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அக்டோபர் ஏழாம் தேதி இன்று ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
இந்நிலையில் வழக்கை ஒத்திவைத்து நீதிபதி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்