புதுக்கோட்டை மாநகர் அரியநாச்சி அம்மன் ஆலயத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பக்தர்கள் ஆண்டின் முதல் நாளை சிறப்பாக ஆரம்பிக்க வேண்டும் என்று நேற்று இரவு முதலே கூடி இருந்தனர். அரியநாச்சி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் அம்பாளின் சன்னிதானத்தில் இருமுடி கட்டி பயணம் தொடங்கினர்.