பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு!

84பார்த்தது
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அப்பர் பிரைமரி பள்ளியில் வரும் 10 தேதி கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. தற்பொழுது அந்த பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பணி எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் புதிதாக கட்ட ப்பட்டு வரும் வகுப்பறைகள் சரியான முறையில் கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி