உலக காசநோய் தின விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் காசநோய் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கூறுகையில், கடந்த 2024ஆம் ஆண்டு 71,962 பேருக்கு காசநோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டு 1,848 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டதில் 90 சதவீத காசநோயாளிகள் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.