புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவிக்கையில், திமுக அரசின் நாலரை ஆண்டு சாதனையை பற்றி விவாதிக்க ஈபிஎஸ் உடன் நான் தயார் நிலையில் உள்ளேன். கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் ஈபிஎஸ். நாங்கள் டெல்லிக்கு அடங்கி போவதுமில்லை, அடமானம் வைக்கவும் வேண்டிய அவசியம் இல்லை என்றார்.