கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி!

73பார்த்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன சென்னை சூப்பர் கிங்ஸ் CEO காசி விஸ்வநாதன் ஏற்பாட்டின் பேரில் புதுக்கோட்டை திருவரங்குளம் புஷ்கரம் வேளான் கல்லூரியில் கடந்த 5 நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரியின் மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற போட்டியினை தொடர்ந்து இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது இலுப்பூர் மதர் தெரசா உடற்கல்வி கல்லூரி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடத்தையும் சிவபுரம் JJ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2வது இடத்தையும் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி 3வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மூன்று அணியினருக்கும் வெற்றி கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வழங்கிய பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் உபகரணங்கள் உள்ள கிட் வழங்கப்பட்டது பரிசளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி பிரிவின் உதவி இயக்குனர் ரமேஷ் புஷ்கரம் கல்லூரியின் மேனேஜர் நெப்போலியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி