புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த மலைக்குடி பட்டியை சேர்ந்தவர் மணிமுத்து (54). இவர் மலைக்குடிப்பட்டி கடைவீதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அங்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.