திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மலையை பாதுகாப்போம் என்பதன் அடிப்படையில், போராட்டம் நடத்த இருந்த இந்து முன்னணி அமைப்பினர் அந்தந்த மாவட்டங்களில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி தலைவர் கற்பகவடிவேல், நிர்வாகி செந்தில் குமார் ஆகிய இரண்டு பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கணேஷ் நகர் போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.