அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் பிரேக் டவுன்! பயணிகள் அவதி!

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட எல்லையான பள்ளத்தூரில் பல்லவன் விரைவு ரயில் பிரேக் பழுதானதால் காரைக்குடி அருகே ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின்பு புறப்பட்டு சென்றது.
காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி அதிகாலை 5. 35 மணிக்கு 18 பெட்டிகளுடன் புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் சென்றபோது கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அந்தப் பெட்டியில் புகை வந்ததது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக பாதுகாப்பு கருதி அதே பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
காரைக்குடியிலிருந்து சென்ற இன்ஜினியர்கள், பழுதான பெட்டியில் பழுது நீக்கும் பணியை விரைவாக மேற்கொண்டனர். பழுது சரிபார்க்கப்பட்ட பின்பு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சுமார் 6: 40 மணியளவில் புறப்பட்டு சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி