புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று, இன்று அதிகாலை ஒரு மணி முதல் 4 மணி வரை மலை பலத்த இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. சிவபுரம், எல்லைப்பட்டி, திருவரங்குளம், அண்டக்குளம் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மேலும் மின்சாரம் இரண்டு மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.