புதுகை மாவட்டத்தில் நாளை (மார்ச். 23) 489 கிராம ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள்களை பற்றி விவாதித்தல், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், ஊராட்சி தணிக்கை அறிக்கை, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.