புதுக்கோட்டையில் மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

79பார்த்தது
புதுக்கோட்டை வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று கூடுவது வழக்கம் வெள்ளிக்கிழமையான இன்று வாரச்சந்தை கூடியது வரும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் தேனி, மதுரை, கம்பம் , சிவகங்கை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மாலைக்குள் 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகும் எனவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி