புதுக்கோட்டையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி...

69பார்த்தது
புதுக்கோட்டையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி. திரைத்துறையில் புகழின் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தார். விலையில்லா புத்தகம், தளபதி விஜய் பயிலகம் போன்ற நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பெருமை சேர்த்து தந்தது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அப்போது தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை எனவும், வரம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என அறிவுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்திலேயே முதல் முதலாக மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டை தான் திறக்கப்படுகிறது. 50 லட்சம் ரூபாயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார். முன்னதாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.