புதுகை நகர் கீழ் நான்காம் வீதி முத்துமாரியம்மன் ஆலயம் அருகே குப்பைகள் அதிகமாக இருந்தது. அப்பகுதி மாநகராட்சி உறுப்பினர் காந்திமதி ஆனந்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று காலை குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். பணியை சிறப்பாக செய்த மாமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.