புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தடுக்கும் தைலமரக் காடுகளை அழிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியர் மு. அருணா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வைத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகத்தை திறக்க வேண்டும். தைல தண்ணீர் நிரப்ப உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். புதிதாக தைலமரக்கன்றுகள் நடுவதைத் தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுசாமி:
மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக பயிரிடப்படும் தைலமரக் காடுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுவிவசாயம் அழிந்து வருகிறது. பல்லுயிர்ப் பெருக்கமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, தைல மரக்காடுகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.
விராலிமலை ஒன்றியம் தொண்டைமான் நல்லூர் கிராமத்தில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு அனுமதி பெற்று விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.