முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில் வழக்கை வரும் மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவு.
கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது பின்னர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இவ்வளக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார் இந்நிலையில் சென்னை சட்டமன்றத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்று விட்டதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை இதனை அடுத்து வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி நேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நேரில் ஆஜராக மகிலா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டு வழக்கை ஓத்தி வைத்தார்