சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு!

79பார்த்தது
சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு!
புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை நகராட்சி 26ஆவது வார்டு எஸ்எஸ் நகர் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில், வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்ட
தொடர்ந்து எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனஅலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜி. எஸ். தனபதி, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதும், குறுங்காடுகளை அதிகளவில் உருவாக்குவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிகள் என்றும், இவை குறித்து இளம்தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் க. சதாசிவம் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் அரசி லதா கருணாநிதி வாழ்த்திப் பேசினார். முன்னதாக மாவட்டச் செயலர் ம. வீரமுத்து வரவேற்றார். முடிவில் மாவட்டப் பொருளாளர் த. விமலா நன்றி கூறினார்.