புதுக்கோட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்க குழுவில் அலுவலக பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். தற்காலிகமாக 12 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ. 20, 000 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மச்சுவாடியில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.