புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை பிரிவு சார்பாக நடைபெற்ற கபடி போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 12-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அணியினர் பங்குபெற்றனர். இதில் புதுக்கோட்டை தனியார் கல்லூரி முதலிடம் பிடித்தது. முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு ரொக்க பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.