மது போதையில் தகராறு: சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.

644பார்த்தது
மது போதையில் தகராறு: சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் விரல் ரேகை நிபுணர் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர்ராஜ். இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதி ஓட்டலில் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்பி வந்திதா பாண்டேவுக்கு புகார் சென்றது. இதையடுத்து டவுன் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி டவுன் போலீஸ் டிஎஸ்பி ராகவி இது குறித்து விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரித்தனர். இதில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தகராறு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி அவர் அறிக்கை அளித்தார். இதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்யக்கோரி திருச்சி சரக டி. ஐ. ஜி. பகலவனுக்கு மாவட்ட போலீஸ் எஸ்பி வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்து டி. ஐ. ஜி. பகலவன் நேற்று உத்தரவிட்டார்.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் குடிபோதையில் ஓட்டலில் தகராறில் ஈடுபட்டதும் பரபரப்பானது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி