புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித்(37) என்பவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித்(37) என்பவர் அதே பகுதியில் மருத்துவக் கிளினிக் நடத்தி வருகிறார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த போது மருத்துவர் அப்துல் மஜித் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பல் மருத்துவர் அப்துல் மஜித் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்தது உறுதியான நிலையில் மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.