புதுக்கோட்டையில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர்கள் அனைவரும் கருப்பு பேஜ் அணிந்து கமிஷன் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்றுக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.