தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள் 13, 15, 17 பிரிவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் போட்டியில் பங்கு பெற புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.