புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்தூர் ஊராட்சி வேதியன்குடியில் புதிதாக மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகக் கட்டிடத்தை மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.