புதுக்கோட்டை மாவட்டம், நத்தம்பண்ணை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ், ரூ. 14 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் கட்டுமானப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பொறி. பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.