இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி!

470பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் நெற்புகை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சிதிலமடைந்துள்ளது. தூண்கள் உள்ள சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் விலும் தருவாயில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆகவே உடனடியாக இந்த தொட்டியை இடித்து விட்டு புதிய தொட்டி கட்டித் தரும்படி அப்பகுதி பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி