சின்ன வெங்காயம் கிடு! கிடு உயர்வு!!

1878பார்த்தது
புதுக்கோட்டையில் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!


புதுக்கோட்டையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக சின்ன வெங்காயம் ரூபாய் 200 வரை விற்றது. பின்னர் தமிழக அரசின் தீவிர முயற்சி காரணமாக இந்த விலை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய் தொட்டது.
இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ஏற்கனவே பல்வேறு காய்கறி விலைகள் உயர்ந்துள்ளதால் என்ன செய்வது என்றே தெரியாமல் இந்த நேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது இல்லத்தரசிகளிலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி