முத்திரைத்தாள் மோசடி 4 பேரை ஆஐர்படுத்திய சிபிசிஐடி!

66பார்த்தது
கடந்த 2020 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வங்கிகள் சம்பந்தமான வழக்குகளில் ஒரிஜினல் முத்திரைத்தாளுக்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி முத்திரைத்தாளை பயன்படுத்தி சுமார் 30 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்த சம்பவத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார்
அதில் கடந்த 9 ஆம் தேதி கும்பகோணத்தை சேர்ந்த செந்தில்குமார், வல்லம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், சென்னையைச் சேர்ந்த முனியாண்டி, தஞ்சாவூரை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த சிபிசிஐ போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அந்த நான்கு பேரையும் இன்று புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சிபிசிஐடி போலீசார் அவர்களை விசாரணைக்காக இரண்டு நாள் நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இங்கு மட்டும்தான் இந்த முறைகேடு நடந்துள்ளது அல்லது வேறு நீதிமன்றங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளது என்பது தெரியவரும் என்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி