புதுக்கோட்டையில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு.
இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு. புதுக்கோட்டை மேல 2 ஆம் விதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவர் வழக்கம் போல வீட்டுக்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதை எடுத்து நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து இரண்டு லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சி ஆதாரத்தைக் கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.