புதுக்கோட்டை வடக்கு ராசியில் இருந்து வரும் அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் கடையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர். போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்களை மீறி கடையில் போஸ்டர் ஒட்டிய பிஜேபியின் மகளிர் அணியினர் 15 பேர் கைது. இன்று மதியம் நடைபெற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மேனா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.