புதுகை, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த செந்தில் (54) என்பவர் புதுகை மார்த்தாண்டபுரத்திலிருந்து நிஜாம்காலனிக்கு பைக்கில் சென்றார். அப்போது பேராங்குளம் சாலை அருகே எதிரே பைக்கில் வந்த சூர்யா (19) மோதியதில் செந்திலுக்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.