புதுக்கோட்டையில் அமைச்சர் நிகழ்ச்சி திடீரென ரத்து!

3652பார்த்தது
புதுக்கோட்டை 24 ஆவது வார்டு பகுதியான பெரியார் நகரில் நேற்று மாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 2400 சதுர அடியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர் ரகுபதி பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய இருந்த இடம் தனிநபருக்கு சொந்தமானது எனவும் அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கூடாது எனவும் தனிநபர் ஒருவர் திடீர் புயலை கிளப்பி உள்ளார். இதனால் நடைபெற இருந்த அடிக்கல் நாட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் நிகழ்ச்சியும் ரத்தானது. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை எப்படி தனி நபர் உரிமை கொண்டாட முடியும் எனக் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனே அடிக்கல் நாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய எம்எல்ஏ முத்துராஜா, வேறொரு நாளில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்துவோம் என உறுதி அளித்தார். இதனால் இளைஞர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி